வைகோ வலியுறுத்தல் குடிநீர் பிரச்னை தீர்க்க போர்க்கால நடவடிக்கை

தினகரன்  தினகரன்
வைகோ வலியுறுத்தல் குடிநீர் பிரச்னை தீர்க்க போர்க்கால நடவடிக்கை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இன்னும் 15 நாளில் மிக மோசமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க  வேண்டும். நீர் நிலைகளை தூர்வாராதது தான் தண்ணீர் பிரச்னைக்கு காரணம். மேகதாதுவில் அணை கட்டினால் இங்குள்ள 19 மாவட்டங்களில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். அதை தடுக்க வேண்டும்.இவ்வாறு வைகோ  கூறினார்.

மூலக்கதை