ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு

தினகரன்  தினகரன்
ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து பேசினார். பாஜ தலைவராக இருந்த அமித் ஷா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து முதல் முறையாக நேற்று அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை  சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினேன். எப்போதும் அவரை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை