சசென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன்  தினகரன்
சசென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பின் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்புக்கு பின் பாலிடெக்னிக் பயிற்சி, அதன்பின் நேரடியாக  இரண்டாமாண்டு இன்ஜினியரிங்கில் சேர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது. அங்கு  மாணவர்கள் சேராத இடங்களுக்கு சமூகப்பிரிவு வாரியாக மீண்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 பாடப்பிரிவுகளில் பிசி பிரிவில் 3 இடங்கள், எஸ்சிஏ பிரிவில் 14 இடங்கள், எஸ்டி பிரிவில் 8 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 21ம் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மூலக்கதை