அடுக்குமாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி விமானி பலி

தினமலர்  தினமலர்
அடுக்குமாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி விமானி பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ெஹலிகாப்டர் ஒன்று 51 மாடி கட்டடத்தில் மோதி தீப்பிடித்து விமானி உயிரிழந்தார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடும் மழையும் பனிப் பொழிவும் உள்ளது. நியூயார்க் அருகில் உள்ள மான்ஹாட்டன் நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை விமானி மேகோர்மேக் இயக்கினார். சில நிமிடங்களில் மழை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது 51 அடுக்குமாடி கட்டடத்தில் மோதியதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி உயிரிழந்தார். கட்டத்திற்குள் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ கூறியது: மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. பயங்கரவாத நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. எனினும் விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை