சில்லரை விலை பணவீக்கம்: 7 மாதங்களில் இல்லாத உயர்வு

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம்: 7 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி: கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அதிகரிப்பாகும். இதற்கு உணவு பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 2.92 சதவீதமாக இருந்தது. இது, தற்போது திருத்தப்பட்டு, 2.99 சதவீதமாக, மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் அறிவிக்கப் பட்டு உள்ளது.சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டு மே மாதத்தில், 4.87 சதவீதமாக, மிகவும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 3.38 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், அதாவது, கடந்த மே மாதத்தில், உணவு பொருட்கள் விலை, 1.83 சதவீதம் அதிகரித்துஉள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில், 1.1 சதவீதமாக இருந்தது.தானியங்களின் பணவீக்க விகிதம், மதிப்பீட்டு மாதத்தில், 1.24 சதவீதம் ஆகும். இதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1.17 சதவீதமாக இருந்தது.

மூலக்கதை