இந்தியாவுக்கான சீன தூதர் நியமனம்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கான சீன தூதர் நியமனம்

பீஜிங்: இந்தியாவுக்கான புதிய சீன துாதராக, சன் வெய்டாங் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசிய நாடுகளுக்கு இடையோன உறவை மேம்படுத்தியதில், சிறப்பாக பணியாற்றிய இவர், நமது தற்போதைய வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், சீனாவுக்கான துாதராக இருந்தபோது, அவருடன் மிக இணக்கத்துடன் பணியாற்றியவர்.

இந்தியாவுக்கான சீன துாதராக இருந்தவர், லுா ஜாஹூயி. இவர், சீன அரசின் வெளியுறவு துறை, துணை அமைச்சராக, சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், சீனா வெளியுறவு துறையின் திட்டம் மற்றும் கொள்கை பிரிவு இயக்குனராக உள்ள, சன் வெய்டாங், இந்தியாவுக்கான துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, சீன அரசு, நமது மத்திய வெளியுறவு துறைக்கு அனுப்பியுள்ளது.

சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் மிஸ்ரி, புதிய துாதராக நியமிக்கப்பட்டுள்ள, சன் வெய்டாங்குக்கு, வாழ்த்து தெரிவித்தும், வரவேற்றும், 'டுவிட்டரி'ல் பதிவிட்டுள்ளார். கடந்த, 2009 - 2011 ஆண்டுகளில், சீனாவுக்கான இந்திய துாதராக, ஜெய்சங்கர் இருந்தபோது, சீன வெளியுறவு துறையில், இணை இயக்குநராக இருந்த சன் வெய்டாங், அவருடன் மிக இணக்கமாக பணியாற்றினார். மேலும், தெற்காசிய நாடுகளுடன், சீனாவுக்கான உறவை மேம்படுத்தியதிலும், மிகச் சிறப்பாக பணியாற்றியவர் வெய்டாங்.

மூலக்கதை