பியுஷ் கோயலுக்கு மேலும் ஒரு பதவி

தினமலர்  தினமலர்
பியுஷ் கோயலுக்கு மேலும் ஒரு பதவி

புதுடில்லி :ராஜ்யசபா பா.ஜ. துணைத் தலைவராக மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜ்யசபா பா.ஜ. தலைவராக சமூகநீதி துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார்.


இந்நிலையில் துணைத் தலைவராக மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பியுஷ் கோயல். பா.ஜ. கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர்.கடந்த பா.ஜ. ஆட்சியில் ராஜ்யசபா பா.ஜ. தலைவராக அருண் ஜெட்லியும் துணைத் தலைவராக ரவிசங்கர் பிரசாத்தும் நியமிக்கப்பட்டு இருந்தனர். உடல்நிலை காரணமாக ஜெட்லி தேர்தலில் போட்டியிடவில்லை. ரவிசங்கர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


மூலக்கதை