எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் ஹாக்கி: மெக்சிகோவுக்கு 7வது இடம்

தினகரன்  தினகரன்
எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் ஹாக்கி: மெக்சிகோவுக்கு 7வது இடம்

புவனேஸ்வர்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் தொடரில், மெக்சிகோ அணி 7வது இடத்தை பிடித்தது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா (9 புள்ளி), பி பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்கா (7 புள்ளி) அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ரஷ்யா, போலந்து, ஜப்பான், தென் ஆப்ரிக்கா அணிகள் கிராஸ் ஓவர் போட்டியில் விளையாடும் நிலையில், 7வது இடத்துக்காக மெக்சிகோ - உஸ்பெகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், மெக்சிகோ அணி 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்று 7வது இடத்துடன் ஆறுதல் அடைந்தது. உஸ்பெகிஸ்தான் கடைசி இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

மூலக்கதை