தாய்லாந்துக்கு எதிராக அமெரிக்கா கோல் மழை

தினகரன்  தினகரன்
தாய்லாந்துக்கு எதிராக அமெரிக்கா கோல் மழை

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில், நடப்பு சாம்பியனான அமெரிக்க அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியுடன் மோதியது. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய தாய்லாந்து எதிர்ப்பின்றி சரணடைந்தது. ஆட்ட நேர முடிவில் அமெரிக்க அணி 13-0 என்ற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்தது. 5 கோல் அடித்து அசத்திய அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ் மோர்கன் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

மூலக்கதை