இங்கிலாந்து ‘பறக்கிறார்’ ரிஷாப் | ஜூன் 12, 2019

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து ‘பறக்கிறார்’ ரிஷாப் | ஜூன் 12, 2019

 நாட்டிங்காம்: உலக கோப்பை தொடருக்காக இங்கிலாந்து செல்கிறார் ரிஷாப் பன்ட். காயத்தில் சிக்கியுள்ள தவான் எஞ்சிய தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டால் மட்டுமே ரிஷாப் அணியில் இடம் பெற முடியும். 

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில், 117 ரன்கள் விளாசிய இவர் வெற்றிக்கு கைகொடுத்தார். இப்போட்டியில், பேட்டிங் செய்தபோது, இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அடுத்த மூன்று லீக் போட்டியிலிருந்து விலகினார். தற்போது, இவருக்குப்பதில் மாற்று வீரராக, விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு ‘லெவன்’ அணியில் வாய்ப்பு கிடைக்காது எனத்தெரிகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ ஷிகர் தவானுக்குப்பதில் ரிஷாப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக, ‘லெவன்’ அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என அர்த்தம் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன் (ஜூன் 16, மான்செஸ்டர்) இங்கிலாந்து வந்துவிடுவார். ஆனால், ரிஷாப் ‘டிரெசிங் ரூமில்’ இருக்க மாட்டார். வீரர்களுக்கான ‘பஸ்சிலும்’ பயணிக்க மாட்டார். கடந்த 2015ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் காயத்தில் சிக்கினார். இவருக்குப்பதில், குல்கர்னி சேர்க்கப்பட்டாலும் ‘லெவன்’ அணியில் இடம்பெறவில்லை. இதைப்போலத்தான், தற்போது ரிஷாப்பின் நிலையும் உள்ளது,’’ என்றார்.

 

மூலக்கதை