போர்ப்ஸ் பட்டியல்: கோஹ்லி ‘100’ | ஜூன் 12, 2019

தினமலர்  தினமலர்
போர்ப்ஸ் பட்டியல்: கோஹ்லி ‘100’ | ஜூன் 12, 2019

புதுடில்லி: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் பெறும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி 100வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவிலிருந்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியாகிறது. இதில் ஆண்டுதோறும் உலக விளையாட்டுத்துறையில் அதிக வருமானம் பெறும் ‘டாப்–100’ நட்சத்திரங்கள் பட்டியல் இடம்பெறும். கடந்த 12 மாதங்களில் பெற்ற வருமானத்தின் அடிப்படையில் (ஜூன் 2018– ஜூன் 2019) தற்போது, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 100வது இடம் பிடித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில், விளம்பரம் (ரூ. 146 கோடி) மற்றும் சம்பளம், பரிசுத்தொகை (ரூ. 27 கோடி) சேர்த்து ரூ. 173 கோடி வருமானம் பெற்றுள்ளார். கிரிக்கெட் மற்றும் இந்திய நட்சத்திரம் என்ற அடிப்படையில், இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே வீரர் கோஹ்லி மட்டும்தான்.

‘நம்பர்–1’ மெஸ்சி

முதலிடத்தில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ. 880 கோடி) உள்ளார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியோனோ ரொனால்டோ (ரூ. 755 கோடி), பிரேசிலின் நெய்மர் (ரூ. 728 கோடி) உள்ளனர். டென்னிஸ் நட்சத்திரங்களான சுவிட்சர்லாந்தின் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் நடால் முறையே 5, 17, 37 இடங்களை வகிக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ஜூன் 2018– ஜூன் 201)9   பெற்ற வருமானம் அடிப்படையில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த 12 மாதங்களில் ரூ. 173 கோடி வருமானம் பெற்று, 100வது இடம் வகிக்கிறார்.

மூலக்கதை