3 வருடத்தில் கேரள முதல்வர், அமைச்சர்களின் விருந்தினர்களுக்கு செலவு 1 கோடி

தினகரன்  தினகரன்
3 வருடத்தில் கேரள முதல்வர், அமைச்சர்களின் விருந்தினர்களுக்கு செலவு 1 கோடி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 வருடங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களை சந்திக்க வந்த விருந்தினர்களை உபசரிக்க சுமார் ₹1 கோடி செலவு செய்துள்ளது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.கேரளாவில் இடது முன்னணி அரசு பொறுப்பேற்ற 3 வருடங்களில் விருந்தினர்களை உபசரிக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செலவு செய்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு கேரள பொது  நிர்வாக கணக்குத் துறை பதில் அளித்துள்ளது. அதன்படி கடந்த 3 வருடங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விருந்தினர்களை உபசரிக்க செலவு செய்த தொகை 99,66,665 ஆகும். இதில் முதல்வர் பினராய் விஜயன் தான் அதிகமாக  ₹26,56,083 செலவழித்துள்ளார்.அமைச்சர்களில் விவசாயத் துறை அமைச்சர் சுனில்குமார் அதிகபட்சமாக 6,90,568 செலவழித்துள்ளார். நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ₹5,88,959, சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா ₹5,82,266, வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகரன்  ₹5,71,681, சட்டத்துறை அமைச்சர் பாலன் ₹5,05,661, மீன்வளத் துறை அமைச்சர் மெர்சிக்குட்டியம்மா 4,83,566ம் செலவழித்துள்ளனர்.

மூலக்கதை