இந்தியாவின் முதல் ஆளில்லா ஸ்கிராம்ஜெட் சோதனை வெற்றி

தினகரன்  தினகரன்
இந்தியாவின் முதல் ஆளில்லா ஸ்கிராம்ஜெட் சோதனை வெற்றி

பாலசோர்: ஸ்கிராம் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பரிசோதனை விமானத்தை (எச்எஸ்டிடிவி) சோதித்து பார்க்க டிஆர்டிஓ முடிவு செய்தது. காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, எரிபொருளுடன்  இணைத்து அதிவேகத்தில் இயங்கும் தொழில்நுட்பம்தான் ஸ்கிராம் ஜெட் இன்ஜினில் உள்ளது. இது ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் செல்லும்.உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்கிராம் ஜெட் இன்ஜின் டிஆர்டிஓ உருவாக்கியது.  இது சிறிய ரக ஆளில்லா சூப்பர்சோனிக் விமானத்தில் பொருத்தப்பட்டு, ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று காலை 11.27 மணிக்கு சோதித்து பார்க்கப்பட்டது. ஸ்கிராம் ஜெட் இன்ஜின் 20 நொடிகள் செயல்பட்டு  விமானம் 32.5 கி.மீ உயரம் வரை பறக்கவிடப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக  டிஆர்டிஓவிஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

மூலக்கதை