ராணுவ விமானம் நொறுங்கிய பகுதிக்கு மீட்பு குழு சென்றது

தினகரன்  தினகரன்
ராணுவ விமானம் நொறுங்கிய பகுதிக்கு மீட்பு குழு சென்றது

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் விமானப்படை விமானம் நொறுங்கியுள்ள இடத்துக்கு மீட்பு படை விரைந்துள்ளது.அசாம் மாநிலம், ஜோர்கத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு கடந்த 3ம் தேதி, ராணுவ வீரர்கள் 5 பேர் உட்பட 13 பேருடன் சென்ற ஏஎன்32 ரக விமானப்படை சரக்கு விமானம் மாயமானது. 8 நாள் தேடுதலுக்குப் பின்  விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ மலைப் பகுதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு, விமானத்தில் சென்றவர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை பார்க்க மீட்பு குழு நேற்று அனுப்பி  வைக்கப்பட்டது. விமானப்படை அதிகாரி கூறுகையில், ‘‘விமானப்படை, ராணுவம், மலையேறும் நிபுணர்கள் கொண்ட மீட்பு குழு, விமானத்தின் மூலம் சென்று, விபத்து நடந்த பகுதிக்கு அருகில் தரை இறக்கப்பட்டுள்ளனர். அங்கு, ஏஎன் 32 விமானத்தில்  சென்றவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை மீட்புக்குழு ஆய்வு செய்யும்,’’ என்றார். லிபோ மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மூலக்கதை