2 நாள் சரிவுக்கு பிறகு தங்கம் மீண்டும் 25,000ஐ நெருங்கியது

தினகரன்  தினகரன்
2 நாள் சரிவுக்கு பிறகு தங்கம் மீண்டும் 25,000ஐ நெருங்கியது

சென்னை:   சென்னையில் ஆபரண தங்கம்  கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் ₹25 ஆயிரத்தை தாண்டி,  ₹25,136 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சனிக்கிழமை விலையிலேயே  தங்கம் விற்கப்பட்டது. ஆனால், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சவரனுக்கு ₹248 குறைந்து ஒரு கிராம் ₹3,111க்கும், சவரன் ₹24,888க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினம் சவரனுக்கு ₹112  குறைந்து ₹24,776 ஆக இருந்தது. 2 நாட்களில் சவரனுக்கு ₹360 குறைந்தது. இது தற்காலிக சரிவுதான் என நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சவனுக்கு ₹176 உயர்ந்து கிராம் ₹3,119க்கும் சவரன் ₹24,952க்கும் விற்பனையானது. இதனால் மீண்டும் சவரன் ₹25,000ஐ தங்கம் நெருங்கியுள்ளது.  சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இதற்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று சவரன் ₹25,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை