ஒருபுறம் நேரம் குறைப்பு நடவடிக்கை: புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பு... இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருபுறம் நேரம் குறைப்பு நடவடிக்கை: புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பு... இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் தீவிரம்

வேலூர்: நேரம் குறைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு மறுபுறம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு கட்டிட வரைபடத்துடன் அனுமதி சான்று மற்றும் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை குறைக்க நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது. புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

கடந்த வாரம் காலி பணியிடங்களில் புதிதாக அதிகரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் டாஸ்மாக் மேலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு கட்டிட வரைபடம் மற்றும் தீத்தடுப்பு கருவிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சேர்த்து திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை