நீலகிரியில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீலகிரியில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை துவங்கியது.

நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆங்காங்கே மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததில் கூடலூரின் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

மின் வாரிய ஊழியர்கள் இவற்றை சீரமைத்து நேற்று இரவு மின் இணைப்பு கொடுத்தனர். இன்று அதிகாலையில் மீண்டும் கூடலூர் நகர் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்-ஊட்டி சாலையில் நடுவட்டம் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் 2 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் அமைத்து உள்ளனர்.
பந்தலூர் தாலுகா மற்றும் ஓவேலி, நாடுகாணி, தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 2வது நாளாக மின்சாரம் இல்லாத நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தொடர் மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மழை காற்று காரணமாக குளிர் அதிகரித்து உள்ளது.

.

மூலக்கதை