காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சிபிஐக்கு மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சிபிஐக்கு மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்தாண்டு மே 22, 23ம் தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். துப்பாக்கிசூடு மற்றும் தடியடிக்கு காரணமாக இருந்ததாக அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் சென்னைக்கு மாற்றப்பட்டனர்.

நீலகிரியில் எஸ்பியாக பணியாற்றி வந்த முரளி ராம்பா, தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். அன்று முதல் இன்று வரை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியிலும் திறம்பட செயலாற்றி வந்தார்.

இந்தநிலையில் எஸ்பி முரளிராம்பாவை சிபிஐக்கு மாற்றம் ெசய்து மத்திய அரசின் உள்துறை செயலர் திரிபாதி உத்தரவிட்டார்.

இவருடன் 2011ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி மற்றும் 2008 ஐபிஎஸ் அதிகாரியான சிவில் சப்ளை எஸ்பி சோனல்சந்திரா மற்றும் ஐஆர்எஸ். அதிகாரி வித்யூத் விகாஸ் ஆகியோர் மத்திய அரசின் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


.

மூலக்கதை