உத்திரமேரூர் அருகே பரபரப்பு: கோணியில் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்ட கோயில் கலசம் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூர் அருகே பரபரப்பு: கோணியில் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்ட கோயில் கலசம் மீட்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கோணியில் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்ட கோயில் கலசம் மீட்கப்பட்டது. அவற்றை வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.

விவசாயி. இவர், தனக்கு ெசாந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.

அதற்கு தேவையான தண்ணீர், விவசாய கிணற்றில் இருந்து பாய்ச்சப்படுகிறது. தற்போது, கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்தது.

இதனால், நிலத்தில் பயிரிப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு சில நாட்களாக தண்ணீர் பாய்ச்சவில்லை. நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

இதனால் பழுதான மோட்டாரை சரிசெய்ய இன்று கிணற்றில் இறங்கினார் பாலசுப்பிரமணியன். அப்போது கிணற்றில் ஒரு கோணி மூட்டை கிடந்தது.

அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.

உடனே சக நண்பர்கள் உதவியுடன், கோணி மூட்டையை வெளியே தூக்கி பிரித்து பார்த்தார்.

அதற்குள், பழமைவாய்ந்த கோயில் கலசம் ஒன்று இருந்தது. உடனே உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கலசத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   மேலும், இப்பகுதியில் உள்ள கோயில் கலசத்தை திருடுவிட்டு வரும்போது, அதை பொதுமக்கள் யாராவது பார்த்ததால் பயத்தில் கொள்ளை ஆசாமிகள் கிணற்றில் வீசி சென்றார்களா அல்லது அந்த கலசத்தால் ஏதேனும் பயன் இல்லை என்று கருதி கிணற்றில் வீசிவிட்டு சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை