நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு

தினமலர்  தினமலர்
நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு

விஸ்வாசம் வெற்றிக்கு பிறகு அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக் இது. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஜூன் 12) மாலை 6மணிக்கு வெளியிடப்பட்டது.

2.04 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில் அஜித் நரைத்த தலைமுடி உடன் வக்கிலாக வருகிறார். டிரைலர் முழுக்க கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளாக நகருகின்றன. ஒரே ஒரு ஆக்ஷ்ன் காட்சி இடம் பெற்று இருக்கிறது. டிரைலரின் முடிவில் "ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துரீங்க..." என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

டிரைலர் அறிவிப்பு வெளியிட்டபோதே டிரெண்ட்டிற்கு கொண்டு வந்த அஜித் ரசிகர்கள், டிரைலர் வெளியானதும் டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்தனர். வெளியான 15 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

மூலக்கதை