குன்மிங் நகரில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி

தினமலர்  தினமலர்

சீனாவின் ஸ்பிரிங் சிட்டி என்று அழைக்கப்படும் குன்மிங் நகரில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி இன்று கோலகலமாக தொடங்கியது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து சுமார் 3,348 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன.

தென்மேற்கு சீனாவின் யுன்னன் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் நடைபெறும் இக் கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் உண்மை போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டியான்ச்சி சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெறும் நடப்பு பொருட்காட்சியில் 74 நாடுகளிலின், மண்டலங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து ஆறு பிரதான கண்காட்சிப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி வெளிநாட்டு நிறுவனங்கள் தான் என்று இக்கண்காட்சியின் யின் நிர்வாகக் குழு இயக்குனர் ஜாங் குஹுவா கூறினார்.

மேலும் 17 கண்காட்சி அரங்குகளில் 7500 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய அரங்கம் பல வெளிநாட்டு வணிகர்களை ஈர்த்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், தங்கள் நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களை, கண்காட்சி அரங்குகளில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இவ்வாண்டு பொருட்காட்சியில் இலங்கையும் கம்போடியாவும் சிறப்பு தகுநிலையை பெற்று தேசிய அரங்குகளை தொடங்கி வைத்தன. இந்த சிறப்பு நிகழ்வில் இரு நாட்டு கலைஞர்களும், தங்கள் நாட்டு பாரம்பரிய உடையுடன் கலை நிகழ்சியும் அரங்கேற்றம் செய்தனர்.

மேலும் நடப்பு பொருட்காட்சியில் மருத்துவம், சுகாதாரம், இயற்கை உணவு, தூய்மை எரியாற்றல் போன்ற விரிவான வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


சீன-தெற்காசிய கூட்டுறவு கருத்துக்களம், சீன-தெற்காசிய வணிகக் கருத்துக்களம் மற்றும் 7 வது சீன-தெற்காசிய தென்கிழக்கு ஆசியா சிந்தனையாளர் மன்றம் ஆகியவை ஏழு நாள் நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

முதல் நாளான இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய யுன்னான் மாநில ஆளுநர், ஒருவழி ஒரு பாதை, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு புதிய இடத்தை திறந்து வைத்துள்ளது மேலும் இது சர்வதேச வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் ஒரு புதிய தளத்தை உருவாக்குவதன் மூலம், உலகளாவிய பொருளாதார ஆளுமையை மேம்படுத்துவதற்கான புதிய நடைமுறைகளை வழங்குகிறது என்றும் கூறினார்.

மேலும் யுன்னான் வெளியுலகிற்கான வாய்ப்புகளை மேலும் திறந்துவிடும், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகம், லாஜிஸ்டிக்ஸ், தொழிற்துறை பூங்காக்கள், நிதி மற்றும் சுற்றுலா ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

மூலக்கதை