வேலூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

வேலூர்: அரக்கோணம் அருகே பருத்திபுத்தூர் கிராமத்தில் குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி வடமாநில இளைஞர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்களால் தாக்கப்பட்ட அசாமைச் சேர்ந்த சூஜித்கோஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிய போது குழந்தையை கடத்த முயன்றதாக எண்ணி பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை