தில்லானா மோகனாம்பாளுக்கு இன்று 87வது பிறந்த நாள் : பத்மினி பற்றிய ஒரு நினைவு

தினமலர்  தினமலர்
தில்லானா மோகனாம்பாளுக்கு இன்று 87வது பிறந்த நாள் : பத்மினி பற்றிய ஒரு நினைவு

நாட்டியபேரொளி என வர்ணிக்கப்படுபவர் நடிகை பத்மினி. அவரின் 87வது பிறந்தநாள் இன்று. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தில் பிறந்த பத்மினி, 4வயதில் நாட்டியம் பயின்றவர். ஆயுள் முழுவதும் ஆடிக் கொண்டே இருந்தார். லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். பின்னர் மூவருமே நடிகை ஆனார்கள்.

திரைப்படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடி வந்த சகோதரிகள், அதன் பிறகு நடிகை ஆனார்கள். ஒரு சில படங்களில் நடனமாடி வந்த பத்மினி, மணமகள் என்ற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்தி மாலாவுடன் பத்மினி ஆடும் போட்டி நடனம் இன்றும் கிளாசிக் நடனமாக போற்றப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருக்கு ஜோடியாக தொடர்ந்து 6 ஆண்டுங்கள் நடித்தார். சிவாஜி பத்மினி ஜோடி தான், மேட் பார் ஈச் அதர் ஜோடியாக சினிமாவில் வலம் வந்தனர். பணம் என்ற படத்தில் தான் முதன் முறையாக சிவாஜியுடன் ஜோடியாக நடித்தார் பத்மினி. அதன் பிறகு 58 படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சாதனையை வேறெந்த ஜோடியும் நிகழ்த்தவில்லை.

சிவாஜி, பத்மினி ஜோடிக்கு நிகரான ஜோடி அதன் பிறகு வாய்க்கவே இல்லை. இருவரும் நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளம்.

நாட்டியத்துக்காகவும், நடிப்புக்காகவும் பல்வேறு விருதுகளை பெற்ற பத்மினி, சினிமாவில் இருந்து ஒய்வு வெற்ற பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டிய பள்ளி நடத்தினார். தனது 75வது வயதில் காலமானார்.

மூலக்கதை