மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம்

தினமலர்  தினமலர்
மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம்

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசுகளில் ராஜூ சுந்தரமும் ஒருவர். நடன இயக்குநராக இருந்தவர் நடிகராகவும் சில படங்களில் நடித்தார். பின்னர் இயக்குநர் ஆனவர், அஜித்தை வைத்து 'ஏகன்' என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப்படம் படுதோல்விப் படமாக அமைந்ததால், அதன்பின் 11 வருடங்களாக அவர் படங்களை இயக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் படம் இயக்க உள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த்தை வைத்து தமிழ், தெலுங்கில ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு சர்வானந்த் தமிழில் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தில் மட்டும்தான் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து அவருக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார். தற்போது தமிழில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். தற்போது நான்கு வருட ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் தமிழில் நடிக்க உள்ளார்.

மூலக்கதை