ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

தினமலர்  தினமலர்
ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி உள்ளார். தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை தழுவி படம் எடுத்து வருகிறார். தலித் அரசியல் பேசும் ரஞ்சித், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஜாதி ரீதியிலான விமர்சனங்களையும் முன் வைத்தார்.

இவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார் ரஞ்சித். வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே நான் பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என தனது மனுவில் கூறியிருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை நாளை(ஜூன் 13) அல்லது நாளை மறுநாள்(ஜூன் 14) எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

மூலக்கதை