தலைவி' படம் வித்யாபாலன் கைவிட்டுப்போனது ஏன் ?

தினமலர்  தினமலர்
தலைவி படம் வித்யாபாலன் கைவிட்டுப்போனது ஏன் ?

விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ந்து தற்போது அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படமாக்கப்படுவது புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது.. அந்த வகையில் முன்னாள் இந்நாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், நரேந்திர மோடி, மறைந்த ஆந்திர முதல்வர்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, என்.டி.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகின.

இந்த நிலையில் தமிழிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தலைவி என்கிற பெயரில் படமாக இயக்க உள்ளார் இயக்குனர் விஜய். இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணவத் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த வேடத்தில் நடிப்பதற்காக வித்யாபாலனிடம் தான் பேசப்பட்டு வந்தது. அவருக்கும் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.

அதேசமயம் அவர் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பாக இந்த படம் குறித்தும் ஜெயலலிதா கதாபாத்திரம் அவரது வாழ்க்கை முறை குறித்தும் அடிக்கடி நிறைய சந்தேகங்களை தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் எழுப்பிக்கொண்டே வந்தாராம். ஒரு கட்டத்தில் அவருக்கு பதில் சொல்வதையே மிகப்பெரிய தொந்தரவாக கருதிய படக்குழுவினர் அவருக்குப் பதிலாக கங்கனாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

பொதுவாக இதுவரை வித்யாபாலன் தான் தமிழில் தன்னைத் தேடிவந்த பல வாய்ப்புகளை உதறியிருக்கிறார். முதன்முறையாக ஒரு படம் வித்யாபாலனை உதறிவிட்டு வேறு கதாநாயகியை தேடிச்சென்று இருக்கிறது என்றால் அது 'தலைவி'யாகத் தான் இருக்கும்.

மூலக்கதை