ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : பா.ரஞ்சித் கைதாகிறார்.?

தினமலர்  தினமலர்
ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : பா.ரஞ்சித் கைதாகிறார்.?

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித், அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ் பெற்றார். பிறகு ரஜினி நடித்த காலா, கபாலி படங்களை இயக்கினார். கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா, மாவட்ட எஸ்பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

"இயக்குனர் பா.ரஞ்சித் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.

இன்று(ஜூன் 12) அல்லது நாளை(ஜூன் 13) இந்த வழக்கில் பா.ரஞ்சித் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.

மூலக்கதை