எதையும் சந்திக்க தயார் : விஷால்

தினமலர்  தினமலர்
எதையும் சந்திக்க தயார் : விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலைத்தை முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்க விதிமுறைகளுக்கு மாறாக விற்று, பல லட்சம் மோசடி செய்திருப்பதாக விஷால் காஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சரத்குமார், ராதாரவி மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஆஜராகி உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு விஷாலுக்கு காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார். படப்பிடிப்பு இருந்ததால் போலீசார் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகாத விஷால், நேற்று ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தார். போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தலில் ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு என்பதை அவர்கள் அறிவிக்கும்வரை வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். கட்டடம் கட்டுவதில் மட்டும் ஏதாவது ஒரு தடையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் அதனால் தாமதமாகிறது. என்றார்.

மூலக்கதை