'சீதா' கடத்தல்தான், சிந்துபாத் கதையா ?

தினமலர்  தினமலர்
சீதா கடத்தல்தான், சிந்துபாத் கதையா ?

ராமாயணம் காவியத்தில் சீதாவைக் கடத்திக் கொண்டு இலங்கையில் சிறை வைக்கிறான் இராவணன். அனுமன், சீதா அங்கு இருப்பதைக் கண்டுபிடித்து ராமனிடம் சொல்ல, பின்னர் படை திரட்டி இலங்கை சென்று சீதாவை மீட்கிறார் ராமன்.

அந்த சீதாவின் கடத்தல் கதையைத்தான் 'சிந்துபாத்' படத்தில் கதையாக வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, படத்தின் கதையைப் பற்றிச் சொன்னால் நாளை அதுதான் தலைப்புச் செய்தியாகிவிடும் என சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்தி சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் 'சிந்துபாத்' படத்தின் கதை என விஜய் சேதுபதி அவரது பேச்சில் தெரிவித்தார்.

இந்த 'சிந்துபாத்' கதைக்கும், 'சீதா' கதைக்கும் பொருத்தம் உள்ளது. எனவே, படத்தில் நிகழ்கால அரசியல் விஷயங்களைச் சேர்த்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

படத்தை இந்த மாதம் வெளியிட உள்ளார்கள். அதற்குள் படம் பற்றிய சர்ச்சை எழ வாய்ப்புள்ளது.

மூலக்கதை