அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் முதல்வர் ஜெகனுடன் ரோஜா சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் முதல்வர் ஜெகனுடன் ரோஜா சந்திப்பு

திருமலை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து அக்கட்சி தலைவர்  ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். அவருடன் 5 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

ஆனால் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார். அத்துடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை ரோஜா நேற்றிரவு 7 மணியளவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் வெளியே வந்த நடிகை ரோஜாகூறியதாவது: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக வேண்டும் என்ற எங்களது 9ஆண்டு கால கனவு தற்போது நிறைவேறி உள்ளது.

நானே எதிர்பார்க்காத சபாநாயகர் பதவி, மகளிர் நல ஆணைய தலைவர் பதவி என பல்வேறு பதவிகளை மீடியாதான் எனக்கு வழங்கி உள்ளது. யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு நன்றாக தெரியும்.

நாளை(இன்று) சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதால், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை