குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் சுமார் 10 தினங்கள் தாமதமாக நேற்றுமுன்தினம் துவங்கியது. துவங்கிய அன்றே இரவில் சுமார் அரைமணி நேரம் தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது.

இன்று காலை சாரலின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. மெயின் அருவியில் ஆண்கள் பிரிவில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சற்று குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.

ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் 3 பிரிவுகளில் 2 பிரிவுகளில் நன்றாகவும்,

பெண்கள் குளிக்கும் 2 பிரிவுகளில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஆண்கள் குளிக்கும் மூன்றாவது பிரிவில் தண்ணீர் விழவில்லை.

நேற்று புலி அருவியில் விழுந்த தண்ணீர் இன்று விழவில்லை. பழைய குற்றாலத்தில் சீசன் துவங்கியதிலிருந்தே இன்னும் தண்ணீர் விழத் துவங்கவில்லை.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராக இருந்தது.

.

மூலக்கதை