5 பேர் சஸ்பெண்ட் கண்டித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்: டீனுக்கு எதிராக கோஷம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 பேர் சஸ்பெண்ட் கண்டித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் போராட்டம்: டீனுக்கு எதிராக கோஷம்

கரூர்: கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து செவிலியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 140 செவிலியர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கூடுதல் பணிச்சுமை மற்றும் டீனின் தன்னிச்சையான போக்கு ஆகியவற்றை கண்டித்து செவிலியர்கள் கடந்த 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள், மாவட்ட தலைவர் கார்த்தி, செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி ஆகிய 4 பேரை டீன் ரோஸிவெண்ணிலா சஸ்பெண்ட் ெசய்தார். இதை கண்டித்து நேற்று பிற்பகல் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.



எங்களது கூடுதல் பணிச்சுமை மற்றும் குறைகளை கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். , ஆர்டிஓ விசாரணை நடத்தி வரும் நிலையில் தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்கத்தோடு டீன் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோரிக்கையை கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

டீனை மாற்றுவது தான் எங்களது கோரிக்கை’’ என்றனர். இதன்பின்னர் மாலை முதல் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை மீண்டும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் தலைமை மருந்தாளுநர் சுப்பிரமணியனையும் டீன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், ‘‘டீன் ரோஸிவெண்ணிலா தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் 5 பேரை சஸ்பெண்ட்  செய்துள்ளார்.



ஆஸ்பத்திரி ஊழியர்களை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார். தொடக்கநிலை சேவை மையத்தை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்.

இன்று செவிலியர்கள் செய்யும் தவறுகளுக்கு என்னென்ன தண்டனை என்று போர்டு வைத்துள்ளார். இவரின் அத்துமீறல் தொடர்கிறது’’ என்றனர்.

மேலும் இந்த பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பிற துறை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்’’ என்றனர்.

நாகையில் ஆர்ப்பாட்டம்
கரூரில் செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

.

மூலக்கதை