பீகாரில் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைகாய்ச்சலால் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி

தினகரன்  தினகரன்
பீகாரில் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைகாய்ச்சலால் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி

முசாஃபர்பூர்: பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைகாய்ச்சலால் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நோயானது மூளையின் செயல்பாட்டை தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் ஒருவித காய்ச்சல் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளது. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என்செபாலிடிஸ் அறிகுறிகளுடன் 133 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகிறது.இதையடுத்து 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த ரத்த சர்க்கரை நிலையான ஹைட்ரோகிளைசீமியாவை தூண்டும் வகையில் குழந்தைகளை வெறும் வயிற்றோடு இரவில் தூங்க அனுமதிக்க வேண்டாம் என்றும், வெறும் வயிற்றில் லிச்சி உள்ளிட்டவற்றை சாப்பிட அனுமதிக்க வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தி இருக்கிறார். 

மூலக்கதை