மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா பரிசளித்த விஜய்

தினமலர்  தினமலர்
மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா பரிசளித்த விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் அவரது 63 படம் தற்போது தளபதி 63 என்ற பெயரில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வேகமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே, அவரது இயக்கத்தில் நடிகர் விஜய், தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2017ல் வெளியான மெர்சல் படம் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில், நடிகர் விஜய்யின் மகனாக அக்ஷத் என்ற சிறுவன், மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதனால், அக்ஷத்தை நடிகர் விஜய்க்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வப்போது, நடிகர் விஜய்யை சந்திக்கும் அக்ஷத்தை தொடர்ந்து நடிக்க வேண்டும் என சொல்லி அனுப்புவாராம்.

சில தினங்களுக்கு முன்னர் அக்ஷத்தின் பிறந்த நாள். இதற்காக, விஜய்யின் சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று, வாழ்த்து பெற்றிருக்கிறார் அக்ஷத். அப்போது, அக்ஷத்தை வாழ்த்தியதோடு, அவருக்கு கேமரா ஒன்றையும் பரிசளித்திருக்கிறார் நடிகர் விஜய்.

மூலக்கதை