இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் சூர்யா: செல்வராகவன்

தினமலர்  தினமலர்
இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் சூர்யா: செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் என்.ஜி.கே., இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். நீண்ட காலம் உருவான இந்தப் படத்தை, சமீபத்தில் படக் குழுவினர் ரிலீஸ் செய்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், படக் குழுவினர் மிகவும் அப்செட் ஆகினர்.

இந்நிலையில், நடிகை சூர்யாவைப் பாராட்டி, இயக்குநர் செல்வராகவும், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்.ஜி.கே., படத்தில் மிக அற்புதமாக நடித்த நடிகர் சூர்யா, ஓராண்டுக்கும் மேலாக, படத்தில் நடித்த கேரக்டராகவே மாறி இருந்தார். சொல்லப் போனால், கேரக்டராகவே வாழ்ந்தார். அவர், படக் குழுவினருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார். அவர், இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் என பெயர் எடுத்திருக்கிறார். அது நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை நானும் உணர்ந்தேன். சூர்யாவுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு செல்வராகவன் கூறியிருக்கிறார்.

மூலக்கதை