பேய் விரட்டும் வேலையில் ஜி.வி.பிரகாஷ்

தினமலர்  தினமலர்
பேய் விரட்டும் வேலையில் ஜி.வி.பிரகாஷ்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிப்பில், இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. காதல், காமெடி படங்களை இயக்கிய எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை இயக்குகிறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளிநாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக் கொள்ளும் ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றுகிறார்.

இதுதான் படத்தின் கதை. இந்தப் படம் திகிலுடன், நகைச்சுவையாகவும் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில், ஜிவி பிரகாஷுடன், ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், சம்ஸ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூலக்கதை