கொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சி.ஐ.ஏ., ஏஜென்ட்: அமெரிக்க பத்திரிகை தகவல்

தினமலர்  தினமலர்
கொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சி.ஐ.ஏ., ஏஜென்ட்: அமெரிக்க பத்திரிகை தகவல்

வாஷிங்டன் : 'மலேஷிய விமான நிலையத்தில், இரண்டு ஆண்டுக்கு முன் கொல்லப்பட்ட, வட கொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர், கிம் ஜாங் நம், சி.ஐ.ஏ., ஏஜென்டாக செயல்பட்டார்' என, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் அதிபராக இருப்பவர், கிம் ஜாங் உன். இவரது ஒன்றுவிட்ட சகோதரர், கிம் ஜாங் நம், 45. இருவருக்கும் இடையே அதிகார போட்டி நிலவியது.இவர் வடகொரியாவில் வசிக்காமல், ஹாங்காங் அருகேயுள்ள சீனாவின் மகுவா பகுதியில் தான் வசித்து வந்தார். இவருக்கு, சீனா ஆதரவு அளித்து வந்தது.

கடந்த, 2017ல், மலேஷியாவுக்கு கிம் ஜாங் நம் சென்றார். விமான நிலையத்தில், இவர் மீது, இரண்டு பெண்கள், 'ஸ்ப்ரே வி.எக்ஸ்.,' என்ற கொடிய ரசாயன விஷத்தை தெளித்தனர். இதை சுவாசித்த கிம் ஜாங் நம், உடனடியாக இறந்தார்.இந்த கொலையை, வடகொரிய அதிபர் குடும்பத்தினர் செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில், கிம் ஜாங் நம், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் ஏஜென்டாக செயல்பட்டு வந்தார் என, அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி, அந்த பத்திரிகையில் கூறியிருப்பதாவது:கிம் ஜாங் நம், அமெரிக்காவின், சி.ஐ.ஏ., ஏஜென்டாகவே செயல்பட்டு வந்தார். அவரை, சி.ஐ.ஏ., அதிகாரிகள், பல முறை சந்தித்து பேசியுள்ளனர்.சி.ஐ.ஏ., அதிகாரிகளை சந்திக்கவே, அவர், மலேஷியாவுக்கு சென்றதாக தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை