பிரதமரின் செயலர்களாக மீண்டும் மிஸ்ராக்கள் நியமனம்

தினமலர்  தினமலர்
பிரதமரின் செயலர்களாக மீண்டும் மிஸ்ராக்கள் நியமனம்

புதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி, கடந்த, மே- 30ல் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால், மற்றும் கேபினட் செயலாளராக பி.கே. சின்கா ஆகியோருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா, 69, பிரதமரின் கூடுதல் முதன்மை செயலராக, பி.கே.மிஸ்ரா, 65, ஆகியோர் மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமன கமி்ட்டி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு கடந்த மே 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது


மூலக்கதை