மாலியில் இருதரப்பு மோதல் : 95 பேர் பலி

தினமலர்  தினமலர்
மாலியில் இருதரப்பு மோதல் : 95 பேர் பலி

பமாகோ : மாலியில் இருபிரிவினரிடையே நடந்த மோதலில் 95 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆப்பரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள டோகன் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் புலானி பிரிவினருக்குமிடையே அடிக்கடி மோதல் இருந்துள்ளத. இந்நிலையில் திடீரென நேற்றிரவு டோகன் கிராமத்தை முற்றுகையிட்ட சிலர் குடிசைகளுக்கு தீவைத்து கொளுத்தினர். தீயில் சிக்கி வெப்பம் தாங்கமால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்த போது அந்த கும்பல் 95 பேரை சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு புலானி பிரிவினர் தான் காரணம் என்று டோகன் கிராம தலைவர் கூறியுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்ட மாலி அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்டா பழிதீர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மூலக்கதை