உலக கோப்பை: மீண்டும் மழையால் ரத்து | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
உலக கோப்பை: மீண்டும் மழையால் ரத்து | ஜூன் 11, 2019

பிரிஸ்டல்: வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி மழையால் ரத்தானது.

இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பிரிஸ்டலில் நடக்க இருந்த லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால், காலை முதலே மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழையின் அளவு குறையாத காரணத்தால், ‘டாஸ்’ கூட போடாத நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இதற்கு முன், பாகிஸ்தான், இலங்கை அணிகள் (ஜூன் 7, பிரிஸ்டல்) மோத இருந்த போட்டியும் ரத்தானது.

 

 

 

மூலக்கதை