மீண்டார் ஜெய்: வார்னர் மகிழ்ச்சி | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
மீண்டார் ஜெய்: வார்னர் மகிழ்ச்சி | ஜூன் 11, 2019

லண்டன்: வார்னர் அடித்த பந்து தாக்கியதற்காக, சிகிச்சை பெற்ற இந்திய வம்சாவளி பவுலர் ஜெய் கிஷான் நடக்கத்துவங்கினார்.

இங்கிலாந்து மண்ணில்உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.கடந்த 9ம் தேதி இங்கிலாந்தின் ஓவலில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதற்கான, பயிற்சியில் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியினர் ஈடுபட்டனர். வார்னர் அடித்த பந்து,இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜெய்கிஷான் தலையில் தாக்கியது.மைதானத்தில் நிலைகுலைந்த இவர்,‘ஸ்டிரச்சரில்’ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ‘சிடி ஸ்கேன்’ எடுக்கப்பட்டதில், தலைப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், ஜெய் கிஷான் எழுந்து நடக்கத்துவங்கினார்.

இது குறித்து ஜெய் கிஷான் தனியார் ‘சேனலுக்கு’ அளித்த பேட்டியில்,‘ பந்து தாக்கிய சம்பவத்திலிருந்து மீண்டுவிட்டேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி,’ என, தெரிவித்துள்ளார். இந்த செய்தி வார்னருக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

 

மூலக்கதை