உலக கோப்பையில் ‘பெயில்ஸ்’ மாற்றப்படுமா | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
உலக கோப்பையில் ‘பெயில்ஸ்’ மாற்றப்படுமா | ஜூன் 11, 2019

லண்டன்: உலக கோப்பை தொடரில் ஔிரும் எல்.இ.டி., ‘பெயில்சை’ மாற்றும் எண்ணம் இல்லை ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இம்முறை, ‘பெயில்ஸ்’ பிரச்னை பெரிதாக பேசப்படுகிறது. பவுலர் வீசும் பந்து, ‘ஸ்டம்ப்சை’ தாக்கும்போது, எல்.இ.டி., ‘பெயில்ஸ்’ ஔிரும். ஆனால், கீழே விழாமல் இருப்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. தென் ஆப்ரிக்காவின் குயின்டன், இலங்கையின் திமுக் கருணாரத்னே உள்ளிட்டோர் இப்படி அதிர்ஷ்டவசமாக போல்டாவதிலிருந்து தப்பினர். சமீபத்திய, லீக் போட்டியில் இந்தியாவின் பும்ரா பந்தில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் வார்னரும் தப்பினார். இது குறித்து, இந்திய கேப்டன் கோஹ்லி, ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் புகார் தெரிவித்திருந்தனர். ‘பெயில்’ கூடுதல் எடை காரணமாக கீழே விழுவதில்லை என கூறப்படுகிறது. 

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்ட அறிக்கையில்,‘ தற்போதைய, உலக கோப்பை தொடரில் ‘ஸ்டம்ப்சின் பெயில்ஸ்’ குறித்து புகார் கூறி உள்ளனர். கடந்த 2015ல் நடந்த ஆண்களுக்கான உலக கோப்பை முதல் எல்.இ.டி., ‘பெயில்ஸ்’ பயன்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டாக உள்ளூர் போட்டி உட்பட மொத்தம் 1000 போட்டிகளில் இது கடைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, உலக கோப்பை தொடர் மத்தியில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டோம்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை