நாடு திரும்புகிறார் மலிங்கா | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
நாடு திரும்புகிறார் மலிங்கா | ஜூன் 11, 2019

 பிரிஸ்டல்: உலக கோப்பை தொடரில் இருந்து நான்கு நாள் விடுமுறையில் உடனடியாக நாடு திரும்புகிறார் மலிங்கா.

இலங்கை அணியின் ‘சீனியர்’ வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 35. உலக கோப்பை தொடரில் 4 போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார். இவரது மாமியார் காந்தி பெரேரா இலங்கையில் மரணம் அடைந்தார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, நான்கு நாட்கள் விடுமுறையில் மலிங்கா உடனடியாக இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்புகிறார்.

அடுத்து ஜூன் 15ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டியில் மலிங்கா பங்கேற்பார் எனத் தெரிகிறது.

மூலக்கதை