பிரிஸ்டலில் விளையாடியது மழை இலங்கை - வங்கதேசம் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
பிரிஸ்டலில் விளையாடியது மழை இலங்கை  வங்கதேசம் ஏமாற்றம்

பிரிஸ்டல்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகளிடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் நேற்று போட்டி தொடங்க இருந்த நிலையில், முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. களத்தை மூடியிருந்த தார்பாய்கள் அகற்றப்பட்டு ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தூறலாகத் தொடங்கி கனமழையாக கொட்டித் தீர்க்க... மைதானம் மீண்டும் குளமானது.நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரும் மழை விடாது கொட்டியதால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தலா 1 புள்ளியை பகிர்ந்துகொண்டன. பிரிஸ்டல் மைதானத்தில் பாகிஸ்தான் - இலங்கை, வங்கதேசம் - இலங்கை என 2 லீக் ஆட்டங்கள் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. இங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை