மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் மிட்செல் மார்ஷுக்கு அவசர அழைப்பு

தினகரன்  தினகரன்
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் மிட்செல் மார்ஷுக்கு அவசர அழைப்பு

இந்திய அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிசுக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பு பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ஸ்டாய்னிஸ், பாகிஸ்தான் அணியுடன் டான்டனில் இன்று நடைபெறும் போட்டியில் ஸ்டாய்னிஸ் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவருக்கு மாற்றாக ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர் இங்கிலாந்து செல்வார் என தெரிகிறது. ஐசிசி விதிகளின்படி காயம் காரணமாக விலகும் ஒரு வீரர், மீண்டும் முழு உடல்தகுதி பெற்றாலும் அணிக்கு திரும்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை