24ம் தேதி டெல்லி வருகிறார் பாம்பியோ

தினகரன்  தினகரன்
24ம் தேதி டெல்லி வருகிறார் பாம்பியோ

வாஷிங்டன்:  ஜப்பானில் உள்ள ஒசாகாவில் வரும் 28, 29ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், மாநாட்டின் இடையே சந்தித்து முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரும் 24ம் தேதி டெல்லி வருகிறார். இது தொடர்பாக பாம்பியோ கூறுகையில், `‘இந்தியாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தோ - பசிபிக் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். மோடி மீண்டும் பிரதமராகி உள்ள நிலையில், வலிமையான இந்தியாவை உருவாக்க  இந்த சந்திப்பு சிறந்த வாய்ப்பாக இருக்கும்,’’ என்றார்.

மூலக்கதை