கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம்

லண்­டன்:உல­க­ள­வில், நம்­பிக்கைக்கு உகந்த பிராண்­டு­களில், முதல் இடத்தை, ‘அமே­சான்’ பிடித்­துள்­ளது.உலக சந்தை ஆராய்ச்சி நிறு­வ­ன­மான, ‘கன்­டார்’ அதன், ‘டாப் 100 பிராண்­டு­கள்- – 2019’ ஆய்­வ­றிக்­கை­யில் கூறி­யுள்­ள­தா­வது:முதல், 10 இடங்­களில் அமெ­ரிக்க நிறு­வ­னங்­களே ஆதிக்­கம் செலுத்தி உள்ளன. இதற்கு முன் முத­லி­டத்­தி­லி­ருந்த, ‘கூகுள்’ மூன்­றா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. மூன்­றா­வது இடத்­தி­லி­ருந்த அமே­சான், முத­லி­டம் பிடித்­துள்­ளது. ‘ஆப்­பிள்’ நிறு­வ­னத்­துக்கு இரண்­டா­வது இடம். கைய­கப்­ப­டுத்­து­தல், வாடிக்­கை­யா­ளர் சேவை உள்­ளிட்­டவை, அமே­சா­னுக்கு முத­லி­டம் பெற்று தந்­துள்­ளது.‘மைக்­ரோ­சாப்ட், விசா, பேஸ்­புக்’ ஆகி­யவை, அடுத்­த­டுத்த இடங்­களை பிடித்­துள்ளன. சீனாவைச் சேர்ந்த, ‘அலி­பாபா’ நிறு­வ­னம், முதன் முறை­யாக, ‘டென்­சென்ட்’ நிறு­வ­னத்தை பின்­னுக்கு தள்ளி, ஏழாம் இடத்தை பிடித்­துள்­ளது.இவ்­வாறு ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை