ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?

தினமலர்  தினமலர்
ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?

புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் அளவுக்கு,
மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக, முன்னாள் தலைமை பொருளாதார
ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.



ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அளித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், அவர்
குறிப்பிட்டுள்ளதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2011- - -12 மற்றும் 2016 - -17 ஆகிய நிதியாண்டுகளில், 7 சதவீதம் அளவுக்கு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால்,
4.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி இருந்திருக்க வேண்டும். இந்த மிகைப்படுத்தலுக்கு காரணம், ஜி.டி.பி.,யை அளவிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



அதிகரிக்கப்பட்ட பதவிக்காலம் மே, 2019ம் ஆண்டு வரை இருந்த நிலையில், அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை