நிரவ் மோடிக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை தீரப்பு

தினமலர்  தினமலர்
நிரவ் மோடிக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை தீரப்பு

லண்டன் : வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, நான்காவது முறையாக ஜாமின் கேட்டு லண்டன் கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார். இம்மனு மீது நாளை (ஜூன் 12) காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.


மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர், மெஹுல் சோக்சி இருவரும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பினர். இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


நிரவ் மோடி மீதான நாடு கடத்தும் வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமின் விண்ணப்பம், நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக ஜாமின் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். இம்மனு மீது இன்று (ஜூன் 11) விசாரணை நடந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிரவ்வுக்கு ஜாமின் கிடைக்குமா என்பது நாளை காலை 10 மணிக்கு தெரியவரும்.

மூலக்கதை