சீனாவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு: 5 பேர் பலி

தினகரன்  தினகரன்
சீனாவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு: 5 பேர் பலி

சீனா: சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும் நிலையில் சுமார் 10,800 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் திரும்பும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மீட்பு பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 14 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் உடைமைகளை இழந்து தவித்து வருவதோடு இந்திய மதிப்பில் சுமார் 2,660 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை